1. இணையான தமிழ்ச்சொல் தேர்க. Conference
(A) பெருங்கூட்டம்
(B) பெருந்திரள்
C) மாநாடு
(D) பேரவை
2. கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க. Consulate
(A) தூதரகம்
(B) இணைத்தூதரகம்
(C) துணைத்தூதரகம்
(D) காப்பகம்
3. உவமையின் பொருளறிந்து சரியான விடையைத் தேர்க. “கிணற்றுத் தவளை போல”
(A) ஒற்றுமையின்மை
(B) தற்செயல் நிகழ்வு
(C) அறியாமை நிகழ்வு
(D) எதிர்பாராத நிகழ்வு
4. ‘விழலுக்கு இறைத்த நீர்போல’ என்ற உவமைக்கு ஏற்றப் பொருள் தருக.
(A) ஒற்றுமையின்மை
(B) வெளிப்படைத்தன்மை
(C) பயனற்ற செயல்
(D) எதிர்பாரா செயல்
5. பசுமரத்து ஆணி போல – உவமையின் பொருளைத் தேர்க.
(A) தடையின்றி மிகுதியாக
(B) அவசர குடுக்கை
(C) தற்செயல் நிகழ்வு
(D) எளிதில் மனத்தில் பதிதல்
6. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க.
விடை : யானைகள் மனிதர்களைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.
(A) யானைகள் மனிதர்களை எப்படி தாக்குகின்றன?
(B) யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
(C) யானைகள் மனிதர்களை எவ்வாறு தாக்குகின்றன?
(D) யானைகள் மனிதர்களை யாரால் தாக்குகின்றன?
7. கொடுக்கப்பட்டுள்ள வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொற்றொடரை தெரிவு செய்க.
விரிந்தது – விரித்தது
(A) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில்தோகை விரித்தது.
(B) மழைக்காற்று மயில்தோகை விரித்தது; பூவின் இதழ்கள் வீசியதால் விரிந்தன.
(c) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது; மயில்தோகை விரிந்தன.
(D) மயில்தோகை விரிந்தது பூவின் இதழ்கள் காற்று மழை வீசியதால் விரிந்தன.
8. இரு வினைகளின் பொருள் வேறுபாடறிந்து பிழையான தொடரைத் தேர்க. அடங்கு – அடக்கு
(A) காவலர் அடக்க, திருடர்கள் அடங்கினர்
(B) மனத்தை அடக்கினால், ஆசை அடங்கும்
(C) ஆசிரியர் அடங்கியதால் மாணவர் அடங்கினர்
(D) ஆசிரியர் அடக்க, மாணவர் அடங்கினர்
9. அகரவரிசைப்படுத்துக
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால்,கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்.
(A) ஆசிரியர், மனிதன், பழம், கிளி, மாணவன், மான், வௌவால், ஓணான், பூனை, தையல், தேனி
(B) ஆசிரியர், ஓணான்,கிளி,தேனி, தையல், பழம், பூனை, மனிதன்,மாணவன், மான், வௌவால்
(C) ஆசிரியர், ஓணான்,கிளி,தேனி, தையல், பழம், பூனை, மனிதன்,மான், மாணவன், வௌவால்
(D) ஆசிரியர், ஓணான்,கிளி, தையல், தேனி, பழம், பூனை, மான், மாணவன், மனிதன், வௌவால்
10. அகர வரிசைப்படி சொற்களை அமைக்க. கோடை, கடல், கொண்டல், குளிர்ச்சி
(A) கடல், கோடை, கொண்டல், குளிர்ச்சி
(B) கடல், குளிர்ச்சி, கொண்டல், கோடை
(C) குளிர்ச்சி, கடல், கோடை, கொண்டல்
(D) கடல், கொண்டல், குளிர்ச்சி, சோடை
11. “தணி” என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று கண்டறி.
(A) தணிதல்
(B) தணிந்தது
(C) தணிந்து
(D) பணிந்தது
12. வேர்ச்சொல்லில் இருந்து தொழிற்பெயரை சுட்டுக :கட்டு
(A) கட்டி
(B) கட்டுதல்
(C) கட்டினான்
(D) கட்டிய
13. வாழ் – என்ற சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறிக.
(A) வாழ்ந்தான்
(B) வாழ்க்கை
(C) வாழ்ந்து
(D) வாழ்ந்த
14. மரம், மறம் – இவ்விரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு அறிக.
(A) தாவரம், வீரம்
(B) வீரம், தாவரம்
(C) வீடு, தோள்
(D) பகைவர், நட்பு
15. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
இளை – இழை
(A) செடியின் இலை நூல் இழை
(B) நூல் இழை மெலிதல்
(C) செடியில் இருப்பது – மெலிதல்
(D) மெலிந்து போதல் நூல் இழை
16. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிதல். பிழைகளற்ற தொடரைக் கண்டறிக.
(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.
(B) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின
(C) என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின.
(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
17. ‘Vowel’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
(A) ஒலியன்
(B) மெய்யொலி
(C) மூக்கொலி
(D) உயிரொலி
18. மரபுப் பிழை நீக்குதல்.
கொடியில் உள்ள மலரை எடுத்து வா!
(A) கொடியில் உள்ள பூவைக் கொண்டு வா!
(B) கொடியில் உள்ள மலரைக் கொண்டு வா!
(C) கொடியில் உள்ள மலரைப் பறித்து வா!
கொடியில் உள்ள மலரைக் கொய்து வா!
19. சந்திப்பிழையற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
(A) கைவினைக்கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்
(B) கைவினை கலைகளுள் ஒன்றை கற்றுக் கொள்வேன்
(C) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்று கொள்வேன்
(D) கைவினைக் கலைக்களுள் ஒன்றைக் கற்று கொள்வேன்
20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
திருவள்ளுவர்
(A) காலம் கி.மு.31
(B) 1330 திருக்குறள்
(C) குறள் வெண்பா
(D) மேற்கணக்கு நூல்
21. மங்கலவழக்குச் சொல் அல்லாதது தேர்க.
(A) திருமுகம்
(B) வெள்ளாடு
(C) நன்காடு
(D) சோணாடு
22. அணுகு – என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக.
(A) அண்மை
(B) அருகில்
(C) விலகு
(D) சேர்ந்திரு
23. கலம் + ஏறி – என்றச் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
(A) கலம்ஏறி
(B) கலமறி
(C) கலன்ஏறி
(D) கலமேறி
24. பிரித்தெழுதுக:
செந்நெற்கட்டு
(A) செந்நெற் + கட்டு
(B) செல் + நெல் +கட்டு
(C) செம்மை + நெல் +கட்டு
(D) செந் + நெற் + கட்டு
25. சேர்த்தெழுதுக: கண் + இல்லது
(A) கணிஇல்லது
(B) கணில்லது
(C) கண்ணில்லது
(D) கண்ணில்லாது
26. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) மனிதர் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டார்கள்
(B) மனிதர்கள் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டார்
(C) மனிதர்கள் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டன
(D) மனிதர்கள் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டார்கள்
27.சொல் -பொருள் – பொருத்துக.
(a) சேகரம் 1.சேதம்
(b) கெடிகலங்கி 2.கூட்டம்
(c) வின்னம் 3. சரியாக
(d) வாகு 4. மிகவருந்தி
(a) | (b) | (c) | (d) | |
A | 4 | 3 | 2 | 1 |
B | 3 | 4 | 1 | 2 |
C | 2 | 4 | 1 | 3 |
D | 4 | 3 | 1 | 2 |
28.சொல்-பொருள் – பொருத்துக.
(a) கடும்பு 1.ஒலிக்கும்
(b) நரலும் 2.பள்ளம்
(c) பொம்மல் 3.சுற்றம்
(d) படுகர் 4.சோறு
(a) | (b) | (c) | (d) | |
A | 4 | 3 | 2 | 1 |
B | 3 | 2 | 1 | 4 |
C | 2 | 1 | 4 | 3 |
D | 3 | 1 | 4 | 2 |
29. சரியான தொடரைக் கண்டுபிடி.
(A) அது ஒரு அழகான ஊர்.
(B) அது ஓர் அழகான ஊர்.
(C) அஃது ஒரு அழகான ஊர்.
(D) அஃது ஓர் அழகான ஊர்.
30.”சாலவும் நன்று’ -இது எவ்வகைத் தொடர்?
(A) அடுக்குத் தொடர்
(B) கட்டளைத் தொடர்
(C) உரிச்சொல் தொடர்
(D) உணர்ச்சித் தொடர்
31.சரியான கூட்டப் பெயர்களைத் தேர்க.
(A) ஆட்டு மந்தை
(B) மாட்டு மந்தை
(C) குதிரை மந்தை
(D) கழுதை மந்தை
32.சரியான கூட்டுப் பெயரை தெரிவு செய்க: புல்
(A) புல் கூட்டம்
(B) புல் கத்தை
(C) புற்கட்டு
(D) புற்குவியல்
33. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. – இக் குறட்பாவில் பயின்று வரும் அணி.
(A) தீவக அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) தன்மையணி
(D) நிரல் நிறை அணி
34. கூற்று,காரணம் : சரியா? தவறா?
கூற்று : இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
காரணம் : இவை தமக்குரிய பொருளை மாறுபடும் இயல்பை உடையது.
(A) கூற்று : சரி,காரணம்: சரி
(B) கூற்று : சரி, காரணம்: தவறு
(C) கூற்று : தவறு, காரணம் : தவறு
(D) கூற்று : தவறு, காரணம் : சரி
35. கூற்று, காரணம் : சரியா? தவறா?
கூற்று: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. இந்நூலுக்கு
காரணம் : இந்நூலில் மணிமேகலையின் துறவு வாழ்க்கை கூறப்படுகிறது.
(A) கூற்று : சரி, காரணம் : தவறு
(B) கூற்று : தவறு, காரணம்: தவறு
(C) கூற்று: தவறு, காரணம் :சரி
(D) கூற்று: சரி, காரணம் : சரி
36.கூற்று ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று வினவுதல் கொளல் வினா.
காரணம் : தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
(A) கூற்றும் காரணமும் சரி
(B) கூற்று சரி, காரணம் தவறு
(C) கூற்று தவறு, காரணம் சரி
(D) கூற்றும் காரணமும் தவறு
37. அடைப்புக்குள் கொடுக்கப்பட்ட சொல்லின் பொருளரிந்து கோடிட்ட இடத்தை நிரப்புக. (புள்)
(A) ஆடு மாடுகளின் உணவு
(B) வயிறு நிறைந்து விட்டது என்பதன் பொருள்
(C) பறவை என்பதன் வேறுபெயர்
(D) அழகான தாவரம்
38.சரியான இணைப்புச்சொல்லால் நிரப்புக.
தனக்கான ஆற்றலைச் சேகரித்து வைக்க மூளைக்குள் இடம் இல்லை. அதற்குக் குருதியோட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
(A) அதனால்
(B) ஏனெனில்
(C) அதுபோல
(D) அதைவிட
39.சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.
(A) எனவே
(B) அதுபோல
(C) அப்படியானால்
(D) ஆனால்
40. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
முதல் ஆழ்வார்கள் பேர்?
(A) யார்
(B) எத்தனை
(C) ஏன்
(D) எதற்கு
41. சரியான இணையைத் தேர்ந்தெடு.
(A) ரவி வந்தான் – எதிர்காலம்
(B) ரவி வருவான் – எதிர்காலம்
(C) ரவி வருகிறான் – இறந்தகாலம்
(D) ரவி சென்றான் – நிகழ்காலம்
42.சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைந்த சரியான விடையைத் தேர்க. திடல், சோறு, தயிர்,விளையாட்டு, பறவை,கூட்டம்,வாழை,கூடு
(A) விளையாட்டுத்திடல், தயிர்ச்சோறு, பறவைக்கூட்டம்
(B) வாழைச்சோறு, பறவைத்திடல், பறவைக்கூடு
(C) பறவைக்கூட்டம், வாழைத்திடல், தயிர்ச்சோறு
(D) விளையாட்டுத்திடல்,வாழைக்கூட்டம், பறவைக்கூடு
43.’பயிற்சி’ என்ற சொல்லோடு இணைக்க இயலாத சொல்
(A) நடை
(B) மொழி
(C) மூச்சு
(D) மலை
44. சரியான எழுத்து வழக்குத் தொடரை கண்டறிக.
(A) உசுரே போனாலும் பொய் சொல்ல மாட்டேன்
(B) உய்ர் போனாலும் பொய் சொல் மாட்டேன்
(C) உசுர் போனாலும் பொய் சொல்ல மாட்டேன்
(D) உயிரே போனாலும் பொய் சொல்ல மாட்டேன்
45. பின்வரும் தொடருக்கு சரியான நிறுத்தற் குறியீட்டு எழுதப்பட்ட தொடரை தெரிவு செய்க.
மழைநீர் ஆற்றுநீர் ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க வேண்டும்.
(A) ‘மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர், ஆகியவற்றைச் சிறிய பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க” வேண்டும்.
(B) ‘மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க’ வேண்டும்.
(C) மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய, பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க வேண்டும்.
(D) மழைநீர்; ஆற்றுநீர்; ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய, பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க வேண்டும்.
46. ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க.
திருநெல்வேலி
(A) நெல்லை
(B) நல்லை
(C) திருநல்வேலி
(D) நெல்வேலி
47. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
மயிலாப்பூர்
(A) கோவை
(B) மயிலை
(C) திருச்சி
(D) குடந்தை
48. பிரித்தெழுதுக – செய்ந்நன்றி
(A) செய் + நன்றி
(B) செய்ம் + நன்றி
(C) செய்ய் + நன்றி
(D) செய்ந் + நன்றி
49. அவன் வந்தது
(A) திணை வழு
(B) பால் வழு
(C) கால வழு
(D) மரபு வழு
50. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க:
உழை உளை
(A) சேறு – புற்று
(B) பாடுபடு -பறவையினம்
(C) விதி -சேறு
(D) வேலை – வலி